close
Choose your channels

'கொடி'யை அடுத்து அனிருத் வெளியேறிய மற்றொரு படம்

Sunday, January 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் ஒருசில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து தற்போது அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நிதி, சமந்தா நடித்து வரும் 'மிக்கி ஜே.மேஜர் (Micky J Meyer) என்ற படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்தும் அனிருத் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் விரைவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் அனிருத் முழுகவனத்தையும் செலுத்தி வருவதால் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் படத்தில் மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment