'ஒரு குட்டிக்கதை' பாடல் இப்படித்தான் இருக்கும்: அனிருத் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
இந்த வீடியோவில் இந்த பாடலின் மெட்டு இப்படித்தான் இருக்கும் என்று அவர் இசைத்து காண்பித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் ’ஒரு குட்டிக்கதை பாடலை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கென சிறப்பு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதனை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்த போது அவரது ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது அவரது படத்தின் பாடல் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் அந்த பாடலை மிகப்பெரிய அளவில் ஹிட்டாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Nanba, get your ?? and ?? ready! #KuttiStory #KuttiKathai is reaching you tomorrow at 5pm ! ??#Master #MasterSingle #KuttiStory #1daytogoforKuttiKathai
— Anirudh Ravichander (@anirudhofficial) February 13, 2020
Thalapathy @actorvijay sir special! @Dir_Lokesh @MalavikaM_ @Jagadishbliss @Lalit_SevenScr @SonyMusicSouth pic.twitter.com/j4vVRIPa6g
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments