தல அஜீத்தின் அட்டகாசமான 'கெத்து' பாடல்?

  • IndiaGlitz, [Saturday,September 26 2015]

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை புரட்டி போட்டது என்பதை பார்த்தோம்.

'வேதாளம்' படத்தில் அஜீத், ஒரு தரலோக்கல் பாடலுக்கு அபார டான்ஸ் ஆடியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வந்த நிலையில் தற்போது அந்த பாடலின் முதல் வரி லீக் ஆகியுள்ளது. "கெத்த விடாத உன் கெத்த விடாத" என்று தொடங்கும் இந்த பாடல், 'அதாரு அதாரு' ஸ்டைலில் பார்வையாளர்களை ஆட்டம் போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தல' என்றாலே கெத்து' என்று கூறப்படும் நிலையில் அவரது படத்தில் இடம்பெற்ற 'கெத்து' பாடல் கெத்தாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் சமூக இணையதளத்தில் கூறி வருகின்றனர்.

மேலும் 'வேதாளம்' படத்தின் பாடல் வெளியீடு வரும் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்தாஸ், ராகுல்தேவ், சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் 'வேதாளம்' படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது.

More News

சீனா, ஜப்பானில் ரிலீஸ் ஆகின்றதா 'புலி'?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

'புலி' வியாபாரம் குறித்து புதிய சுவாரஸ்ய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய 'புலி' படத்தின் அனைத்து ஏரியாவின் உரிமைகளும் விற்பனையாகி கிட்டத்தட்ட தமிழகம்...

அமெரிக்கா, கனடாவில் 'புலி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறது....

'தனி ஒருவன்' ராஜாவுக்கு ஷங்கர் பாராட்டு

சமீபத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் பாக்ஸ்..

மம்முட்டியுடன் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர்

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக முன்னணி இடத்தில் இருந்தாலும்...