விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த அனிருத்

  • IndiaGlitz, [Friday,April 01 2016]

விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்காக ஒரு புதிய பாடல் தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இமான் இசையமைத்த 'நீ என்ன பெரிய அப்பாடக்கரா' என்ற பாடலை 'என்னமோ ஏதோ' படத்திற்காக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஷாலுக்காக அனிருத் பாடியுள்ள இந்த பாடலும் 'அப்பாடக்கர்' பாடலை போலவே சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இது ஒரு கிராமிய பாடல் என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள நடிகர் விஷால், விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

'தெறி'யில் இன்னொரு போனஸ். ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே...

கமல், விக்ரம் வரிசையில் இணைகிறாரா சிம்பு?

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெகுவிரைவில் அடுத்தடுத்து...

பின்லேடன் திருச்சிக்கு வரப் போறாராமே...

உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் பின்லேடன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில்...

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

விஜய்யின் 'தெறி'யில் உள்ளே நுழைந்தார் 'பருத்திவீரன்' அமீர்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில்...