விக்ரம் பிரபு படத்தில் முதன்முதலாக இணையும் அனிருத்

  • IndiaGlitz, [Wednesday,October 26 2016]

விக்ரம்பிரபு நடித்து வரும் 'நெருப்புடா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் விக்ரம்பிரபு, இளையதிலகம் பிரபு, ராம்குமார், இசையமைப்பாளர் சீன் ரோல்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீன் ரோல்டான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல இளம் இசையமப்பாளர் அனிருத்தும் இன்னொரு பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளதாகவும் இந்த பிரஸ் மீட்டில் தெரிவிக்கப்பட்டது. விக்ரம்பிரபு படத்தில் அனிருத் பாடுவது இதுவே முதல்முறை என்பதும் அதுமட்டுமின்றி முதல்முறையாக விக்ரம் பிரபுவே ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாக விக்ரம்பிரபு தெரிவித்தார். விக்ரம்பிரபுவின் முதல் தயாரிப்பான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை அசோக்குமார் என்பவர் இயக்கி வருகிறார்.

More News

விஜய், அஜித் சூர்யாவுக்கு-3, தனுஷூக்கு -2

தனுஷ் நடித்துள்ள 'கொடி' மற்றும் கார்த்தி நடித்துள்ள 'காஷ்மோரா' ஆகிய படங்கள் வரும் தீபாவளி தினத்தில் மோதவுள்ளது...

மிஷ்கின் படங்களுக்கு இசையமைப்பது சவாலான விஷயம். அரோல் கரோலி

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான அரோல் கரோலி மிஷ்கின் இயக்கிய 'பிசாசு'...

பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் 'ரூபாய்' திரைப்படம். இயக்குனர் அன்பழகன்

பிரபுசாலமன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தை இயக்கிய இயக்குனர் அன்பழகன் இயக்கிய அடுத்த படம் 'ரூபாய்'...

சிம்புவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்தது ஏன்?

கோலிவுட் திரையுலகில் தனுஷ், சிம்பு தொழில் முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கின்றது...

செளந்தர்யா ரஜினியின் அடுத்த ஹீரோ இவர்தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவின் முதல் கேப்சர் மோஷன் திரைப்படமான 'கோச்சடையான்' படத்தை இயக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்...