அனிருத்தின் இரண்டாவது படத்தில் நானி?

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

தமிழ் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் தெலுங்கு திரையுலகில் பவன்கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடித்த Agnyaathavaasi என்ற படத்திற்கு இசையமைத்தார்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது தெலுங்கு படம் ஒன்றுக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கவுதம் தினானுரி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் 'நான் ஈ' புகழ் நானி ஹீரோவாக நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அனிருத் தனது பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையமைப்பில் தமிழில் உருவாகியுள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.