அனிருத் வெளியிட்ட விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே 'ஜகஜ்ஜால கில்லாடி' மற்றும் 'இன்று நேற்று நாளை 2' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த புதிய படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'எஃப்ஐஆர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ள இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். அஸ்வத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அருள்வின்செண்ட் ஒளிப்பதில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.