'மாஸ்டர்' படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத்: ரசிகர்கள் குஷி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டதும் முதல் திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் எப்பொழுது வெளிவருகிறதோ தெரியவில்லை ஆனால் அது குறித்த செய்திகள் தினந்தோறும் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைப்பக்கத்தில் ’மாஸ்டர்’ குறித்த ஒரு மாஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது
அந்த வீடியோவில் ’மாஸ்டர்’ படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் அந்த பாடலை முதன்முதலாக கேட்ட போது அனிருத் ஆடிய உற்சாக நடனம் தான் உள்ளது. அனிருத்தும் அவரது குழுவினரும் ’வாத்தி கம்மிங்’ பாடலில் Beatஐ கேட்டு ஆடும் நடன வீடியோவை விஜய் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
Time : 645 am approx one random morning.. Our reaction at the studio when we heard the beat of #VaathiRaid for the first time ?? pic.twitter.com/DmiYUUXgC3
— Anirudh Ravichander (@anirudhofficial) June 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com