சிம்பு படப்பிடிப்பு தளத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபலம்

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் இடம்பெற்ற டிரெண்ட் பாடல் கடந்த புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள தனியார் தீம் பார்க்கில் நடைபெற்று வருகிறது.

சிம்பு, தமன்னா நடித்து வரும் இந்த பாடல் காட்சியை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி கொண்டிருந்தபோது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் சிம்புவின் நண்பருமான அனிருத், சர்ப்ரைஸ் விசிட் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

அனிருத், சிம்பு நல்ல நண்பர்கள் என்பதும் சமீபத்தில் அனிருத் இசையமைத்த 'ரம்' படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. விரைவில் சிம்பு படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பைரவா' போனஸ் பாடலின் டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' ஜனவரி 12ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தமிழக கவர்னராக பிரபல நடிகரின் உறவினர் நியமனமா?

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசகர் ராவ் செயல்பட்டு வருகிறார்.

ரஜினியை அடுத்து விஜய் படத்தை தயாரிக்கின்றாரா தனுஷ்?

நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா, என பல அவதாரங்களில் வெற்றிகரமாக ஜொலித்து வருபவர் தனுஷ்.

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய இளைஞர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய காதலி தன்னைவிட்டு எப்போதும் பிரிந்துவிட கூடாது என்று பயமுறுத்துவதற்காக ...

சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது.