ஹீரோவாக நடிப்பது எப்போது? அனிருத் பதில்
Saturday, October 15, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறும் சீசன் நடந்து வருகிறது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துவிட்ட நிலையில் இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகிவிட்டார்.
இந்நிலையில் ராக் ஸ்டார் அனிருத் ஒருசில நடனக்காட்சிகளில் மட்டும் நடித்து வரும் நிலையில் அவர் எப்போது ஹீரோவாக மாறுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனிருத், "நம்ம வாழ்க்கையில என்னைக்குமே மியூசிக்தான் ஹீரோ' என்று கூறியுள்ளார். இதிலிருந்து அவர் இசையில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments