அனிருத்தின் அடுத்த ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 27 2016]

பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் இசையமைத்துள்ள 'ரம்' படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். சாய் பரத் இயக்கியுள்ள இந்த படத்தை விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார்.
முதல் முறையாக திகில் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் ஏழு பாடல்கள் கொண்ட இந்த படத்தின் ஆல்பத்தில் நான்கு பாடல்களை அனிருத்தே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் சமீபத்தில் இசையமைத்த நானும் ரெளடிதான், வேதாளம், தங்கமகன், ரெமோ ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த வரிசையில் இந்த படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதா ஆக விரும்பும் த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகையின் மார்க்கெட் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக...

'பைரவா' டீசர் ரிலீஸ் தேதி-நேரம். அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள 'பைரவா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள...

சென்சார் ஆகிவிட்டது 'பைரவா' டீசர். ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சுவிஸ் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

சூர்யாவின் 'எஸ் 3' மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்து வந்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தகவலை ஏற்கனவே பார்த்தோம்...

விக்ரம் பிரபு படத்தில் முதன்முதலாக இணையும் அனிருத்

விக்ரம்பிரபு நடித்து வரும் 'நெருப்புடா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில்...