அனிருத் இசையை கேட்டு பிரமித்த பிரமாண்ட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இந்த ஆண்டு பிரம்மாதமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவர் இசையமைத்த அஜித்தின் 'விவேகம்' பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு அவரது இசையில் உருவான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', மற்றும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ஆகிய படங்களும் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இது அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டீசர் நேற்று பவன்கல்யாண் பிறந்த நாளை அடுத்து வெளியானது. இந்த டீசரின் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, அனிருத்தின் இசையை தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். 'வாவ்... என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மெலோடி.. பாடல் டீசரிலேயே அசத்திவிட்டது பவர் ஸ்டார் த்ரிவிக்ரம் ஸ்டைல்; என ராஜமெளலி குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு பின்னர் அனிருத் தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wow.. What an impact with a simple melody and a single shot of Powerstar..
— rajamouli ss (@ssrajamouli) September 2, 2017
Trivikram style... #PSPK25.. https://t.co/fMjqla7DLY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments