கமல்-ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்கள் என்றாலே அதன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதை சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும். இந்த நிலையில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணையவுள்ள 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளர் மாற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இன்றைய இளைஞர்களின் துள்ளலுக்கு ஏற்றவாறு இசையமைத்து தமிழ்சினிமாவின் முன்னணி இடத்தை ஒருசில வருடங்களிலேயே பிடித்துவிட்ட இளம் இசைப்புயல் அனிருத், 'இந்தியன் 2' படத்தில் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஷங்கர் இயக்கிய 'அன்னியன்', 'நண்பன்' தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்த நிலையில் 'இந்தியன் 2' படத்திற்கு இசையமைக்க அனிருத்துக்கு வாய்ப்பு கிடைத்தால் உண்மையில் அனிருத்தின் கிராஃபில் மிகப்பெரிய வளர்ச்சி என்றே கூற வேண்டும்

மேலும் 'இந்தியன் 2' படத்தை முதலில் தில்ராஜூ தயாரிப்பதாக இருந்தது. பின்னர் '2.0' தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தை 'இந்தியன்' முதல் பாகத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.