'வாத்தி கம்மிங்' பாடல்: அனிருத் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இணையதளங்களில் மிக அதிகமான பார்வையாளர்களை பெற்று இந்த பாடல் சாதனை புரிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர் ’வாத்தி கம்மிங்’ பாடலை கம்போஸ் செய்த காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில் ’மிக பிரமாதமாக கம்போஸ் செய்யும் திறமை உள்ள ஒருவரால் தான் இதை செய்யமுடியும். கடவுளின் ஆசீர்வாதம் அந்த சகோதரருக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். அனிருத்தின் இந்த வீடியோ சமூக வலைதள பயனாளர்களால் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 

More News

'தேவர் மகன்' பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

உதவித்தொகை வாங்க நேரில் வரவேண்டாம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சமீபத்தில் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே.

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி: டாஸ்மாக் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா???

கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்