அஜித்தின் 'துணிவு' படத்தில் திடீரென இணைந்த அனிருத்: மாஸ் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து முடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.
‘துணிவு’ படத்திற்காக அஜித் மற்றும் மஞ்சுவாரியார் டப்பிங் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ‘துணிவு’ படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது திடீரென ராக்ஸ்டார் அனிருத் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’ஏகே 62’ திரைப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகி இருக்கும் நிலையில் ‘துணிவு’ படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
#ChillaChilla recorded our Rockstar @anirudhofficial ???? in the lyrics of @VaisaghOfficial
— Ghibran (@GhibranOfficial) November 4, 2022
Hashtag ???? ???? #ThunivuUpdate #Ajithkumar #HVinoth #NoGutsNoGlory @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan pic.twitter.com/lgwsZ9rpwp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments