அனிருத், ஜி.வி.பிரகாஷ் பாதையில் இமான்?

  • IndiaGlitz, [Friday,July 10 2015]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் 'வில் அம்பு' படத்தில் இடம்பெற்ற ஒரு சிங்கிள் டிராக் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே. அனிருத் இணைந்த பாடிய 'ஆள சாய்ச்சுப்புட்ட' என்ற இந்த பாடலை விஷால் இணையதளத்தில் வெளியிட்டார். இளம் இசையமைப்பாளர் அனிருத் குரலில் வெளிவந்த இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இதே படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஜி.வி.பிரகாஷும் ஒரு பாடலை பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய 'குறும்படமே' என்று தொடங்கும் இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாசனுடன் இணைந்து பாடியுள்ளார்.

மேலும் அனிருத், ஜி.வி.பிரகாஷை தொடரந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலான 'நீயும் அடி நானும்' என்ற பாடலை இசையமைப்பாளர் டி.இமான், ஏ.வி.பூஜாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீன், மூன்று இசையமைப்பாளர்களை பாட வைத்து சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ மற்றும் பலர் நடித்து வருகின்றனர். த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த 'வில் அம்பு' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

More News

ராஜமவுலி படங்கள் பிரம்மாண்டமாக இருப்பது எதனால்?

தமிழில் பிரம்மாண்டத்துக்குப் பெயர்போனவர் யார் என்று சொன்னால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும் இயக்குனர் சங்கரின் பெயரை...

ஹாட்ரிக் வெற்றிக்கு வித்திடுவார்களா விஜய்-முருகதாஸ்?

இளையதளபதி விஜய் நடித்த 58வது படமான 'புலி' விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதேவேளையில் அவர் நடித்து வரும் 59வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ...

'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனின் முதல் முயற்சி

ரம்யா கிருஷ்ணன் குரல் ஒலிக்கப் போகும் முதல் தெலுங்கு படம் ’பாகுபலி’

'விஜய் 59' படத்தில் இணைந்த 3-வது நாயகி

'புலி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படம் குறித்து தினந்தோறும் ஒவ்வொரு தகவல்களாக பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

ஊட்டியில் ஜெயம் ரவி-லட்சுமி மேனன் படப்பிடிப்பு

ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'ரோமியோ ஜூலியட்' சமீபத்தில் 25வது நாளை பூர்த்தி செய்தது. 'பேராண்மை' படத்திற்கு பின்னர் ...