பிரபல ஹீரோவுக்காக அனிருத் கம்போஸ் செய்த பாடல்.. முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் தான்..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

இசையமைப்பாளர் அனிருத் பிரபல ஹீரோவின் படத்திற்காக கம்போஸ் செய்த பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் முறை கேட்கும் போதே ஆட்டம் போட வைக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவாரா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்றும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற Fear Song என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் ஐந்து மொழிகளிலும் வெளியாகிய நிலையில் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ளார். தமிழில் விஜய் நடித்த ‘லியோ’ படத்திற்கு பாடல் எழுதிய விஷ்ணு எடாவன்ன் இந்த பாடலை எழுதி இருக்கும் நிலையில் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு, ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கமல்ஹாசனிடம் தேதி கேட்க லிங்குசாமிக்கு உரிமையே இல்லை.. 'உத்தம வில்லன்' விவகாரம் குறித்து தயாரிப்பாளர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த 'உத்தமவில்லன்' என்ற திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் வில்லன்.. ரூ.150 வசூல் படம் கொடுத்த பிரபல ஹீரோவா?

பிரமாண்ட இயக்குனர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும்

முன்னாள் மனைவி சுசித்ராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக் குமார்?  தனுஷ் காரணமா?

பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக யூடியூப் சேனல்களுக்கு பரபரப்பாக பேட்டி அளித்து வருகிறார் என்றும் அதில் அவர் கூறும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்களுக்கு

'தளபதி 69' படத்தின் நாயகி இவரா?  சூர்யா படத்தில் தேசிய விருது வாங்கியவர் ஆச்சே..!

சூர்யா படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற நடிகை தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' படத்தின் நாயகி என செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

அட்டகாசமான அஜித்தின் 3 தோற்றங்கள்.. 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இன்று மாலை 6.31 மணிக்கு இந்த படத்தின் முக்கிய