காமெடி நடிகரின் படத்தில் இணைந்த அனிருத்-சிவகார்த்திகேயன்: படக்குழு அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வைகைப்புயல் வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில் சதீஷ் நடித்து வரும் ’நாய் சேகர்’ படத்தின் முக்கிய அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது.
சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’நாய் சேகர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
’எடக்கு மடக்கு’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்ய சிவகார்த்திகேயன் எழுதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சதீஷின் ’நாய் சேகர்’ படத்தில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடலை பிரபல இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
First Single #EdakkuModakku from #NaaiSekar will be released by Dir @ARMurugadoss & @vp_offl Tom 5 PM. A @anirudhofficial single @Siva_Kartikeyan lyrical@Ags_production @agscinemas @archanakalpathi @aishkalpathi @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam @SonyMusicSouth pic.twitter.com/n4MOVK4n4M
— Sathish (@actorsathish) December 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments