close
Choose your channels

நயன்தாராவுடன் இணைந்து குரல் கொடுக்கும் அனிருத்

Thursday, January 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 'மாயா'வின் வெற்றிக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் நடித்துள்ள திகில் படமான 'டோரா' படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் 'எங்கே போற டோரா' மற்றும் 'வாழவிடு' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த படத்திற்காக அனிருத் பாடிய 'ரா ரா ரா' என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அனிருத்திடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் பாடிய இந்த பாடலில் நயன்தாரா சொந்தக்குரலில் பேசிய வசனங்களும் உள்ளது. எனவே முதன்முதலாக அனிருத், நயன்தாரா இணைந்து குரல் கொடுத்துள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment