close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் எப்போது? அனிருத் தகவல்

Monday, July 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் தமிழ் மற்றும் மலையாள படங்களின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அவருடைய நடிப்பும் இளமையும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகும் நிலையில் தென்னிந்தியாவின் பிசியான நடிகைகளில் ஒருவராக அவர் விளங்கி வருகிறார்.
தற்போது நயன்தாரா ஜீவாவுடன் 'திருநாள்', வெங்கடேஷூடன் பாபு பங்காராம்', கார்த்தியுடன் 'காஷ்மோரா', விக்ரமுடன் 'இருமுகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நிலையில் இந்த படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனிருத்-நயன்தாரா இணைந்த 'நானும் ரவுடிதான்' சூப்பர் ஹிட் ஆனதை போல இந்த படமும் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment