இது பிரேக் அப் அல்ல, வெறும் பிரேக் தான். தனுஷ் பிரிவு குறித்து அனிருத்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 'கொலைவெறி' பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்றார். அதன்பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி', மாரி, தங்கமகன்' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். இந்நிலையில் இருவரும் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
தனுஷின் தற்போதைய படங்களில் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து வரும் நிலையில் இந்த பிரிவு குறித்து முதல்முறையாக அனிருத் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஒரு படைப்பாளி ஒரே நடிகருடன் அடுத்தடுத்து பணியாற்றினால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். இதுவே சிறிய இடைவெளி விட்டு பணியாற்றினால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவர். அந்தவகையில் ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பளித்து நானும் தனுஷும் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளோம். விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
தனுஷ்-அனிருத் இடையே ஏற்பட்ட பிரிவு, பிரேக்-அப் என்று அனைவரும் கருதிய நிலையில் இது வெறும் பிரேக் மட்டுமே என்று அனிருத் அளித்த விளக்கம் இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com