அஜித்தை திணறடித்த அனிருத்தின் ஐம்பது

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று அஜித்தின் 'விவேகம்'. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தீம் சாங் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் சுமார் 50 தீம் பாடல்களை கம்போஸ் செய்து அஜித்திடம் கொடுத்ததாகவும், அவர் கொடுத்த அனைத்து தீம் பாடல்களும் சூப்பராக இருந்ததால் அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய அஜித் திணறியதாகவும் கூறப்படுகிறது.

ஒருவழியாக அஜித் அனைத்து பாடல்களையும் கவனமாக கேட்டு ஒன்றை தேர்வு செய்ததாகவும் அஜித் தேர்வு செய்த தீம் பாடல், 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு நிகரானது என்றும் இந்த பாடல் உலகம் முழுவதும் கலக்க போவது உறுதி என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு நிகரான ஆக்சன் காட்சிகள் அடங்கிய 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் 'வைபவ்'

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது...

அஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்த பிரபல நிறுவனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது...

'விஸ்வரூபம் 2' பட டிரைலர் வெளியாகிவிட்டதா? கமல் விளக்கம்

உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டதாக கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்...

ஆர்.ஜே.பாலாஜியை திட்டியது ஏன்? இயக்குனர் கண்ணன்

'ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் ரீமேக் குறித்து மனம் திறந்த கெளதம் கார்த்திக்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு நடித்த வெற்றிப்படம் 'அக்னி நட்சத்திரம்'.