சர்வதேச ரியாலிட்டி ஷோவில் அனிருத்தின் அட்டகாசமான இசை: ஆச்சரிய தகவல்

அனிருத்தின் இசையில் உருவான பாடல் ஒன்று சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’மாரி’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு தர லோக்கல் பாடல் ஒன்றை தனுஷ் எழுதி பாடி இருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது பிரிட்டனில் நடைபெற்ற சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷோவில் கலந்து கொண்ட மும்பையைச் சேர்ந்த நடன குழு ஒன்று ’மாரி’ படத்தின் பாடலை பயன்படுத்தி அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர் என்பதும் பிரமிட் போன்று அவர்கள் அந்தரத்தில் தாவித்தாவி ஆடிய நடனம் நடுவர்களை அசர வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோவை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அனிருத்தின் இசை சர்வதேச அளவில் ரீச் ஆகியுள்ளது இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.