ஆடு, மாடுகளுடன் இனி பேசலாம்: நித்தியானந்தா அதிரடி
- IndiaGlitz, [Thursday,September 20 2018]
மென்பொருள் மூலம் ஆடு, மாடுகள் உள்பட அனைத்து விலங்குகளையும் பேச வைக்கவுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போன சாமியார்களில் ஒருவர் நித்தியானந்தா. ரஞ்சிதா விவகாரம் மற்றும் மதுரை ஆதினம் விவகாரத்தின் போது தலைப்பு செய்திகளில் அடிபட்ட சாமியார் நித்தியானந்தா தற்போது விலங்குகளை மென்பொருள் மூலம் பேச வைக்கவுள்ளதாகவும், அதிலும் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பேச வைக்கும் முயற்சியில் தான் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் பறவைகளுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், தனக்கு ஆயிரம் வயது என்றும் ஒரு சாமியார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வகையில் தற்போது நித்தியானாந்தா விலங்குகளை பேச வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்,.
குரங்குகள் உள்பட ஒருசில விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு இருப்பது போன்ற உள்ளுறுப்புகள் கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த விலங்குகளுக்கு சில உணர்வுகளை அளிப்பதன் மூலம் அதனை மாற்றமுடியும் என்றும் கூறியுள்ள நித்தியானந்தா, விலங்குகளின் வோக்கல் கார்டு எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரி செய்தால் விலங்குகளை எளிதில் பேச வைக்கலாம் என்றும் சோதனை முறையில் இது வெற்றி பெற்றுள்ளதாகவும் இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து விலங்குகளையும் பேச வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் மென்பொருள் நடைமுறைக்கு வந்தவுடன் உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் தமிழ், சமஸ்கிருதத்தில் பேசினால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்து உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்