'ஈஸ்வரன்' டீசரை உடனடியாக நிறுத்த நோட்டீஸ்: படக்குழுவினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய இயக்கிவரும் ’ஈஸ்வரன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை சமூகவலைதளத்தில் பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து விலங்குகள் நலவாரியம் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஒன்றில் ’விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பாம்பு காட்சி பயன்படுத்துவது விதிகளுக்கு எதிரானது என்றும், விலங்குகள் நலவாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி பயன்படுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் ’ஈஸ்வரன்’ திரைப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவற்றை பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

More News

அப்பாவை அப்படியே உரிச்சு வைத்தால்போல் உள்ளது. வைரலாகும் கேப்டன் மகனின் போட்டோ!

சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் சாதனை செய்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில்

நடிகர் பிரபுதேவாவிற்கு ரகசியத் திருமணம்?

சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான பிரபுதேவா தனது திறமையால் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்துத் தற்போது நட்சத்திர அந்தஸ்தில் வலம் வருகிறார்.

பிக்பாஸ் சுரேஷ் மகனா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் சவாலான ஒரு போட்டியாளராக இருந்தது மட்டுமின்றி

45 வயது பெண்ணுடன் 29 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரின் மரணத்திற்கு பின் தெரிந்த உண்மை!

29 வயது இளைஞர் ஒருவர் 45 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்தது இருவரின் மரணத்திற்கு பின்னர் தெரிய வந்துள்ளதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

ஒரு ஆப்பிள் போனை வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றவர் கதி! பதைக்க வைக்கும் தகவல்!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தைக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.