தனுஷின் அடுத்த படத்தின் ஜோடியாகும் 'அனிமல்' நடிகை.. தமிழில் முதல் படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தனுஷின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டில் உருவான ‘அனிமல்’ திரைப்படத்தில் ரன்வீர் கபூர், அனில் கபூர் பாபிதியோல், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 900 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த திருப்தி திம்ரி என்பவர் தான் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இதுவரை பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தேரா இஷ்க் மெய்ன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது .
இதில் முதல் கட்டமாக இந்த படத்தின் நாயகியாக திருப்தி திம்ரி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மேலும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக கியாரா அத்வானி நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருப்தி திம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் ’குபேரா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ’என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout