விராத் கோஹ்லி இவ்வளவு அர்ப்பமானவரா? கும்ப்ளே ரசிகர்கள் கொதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே. அவர் விலகியபோது கூட விராத் கோஹ்லி குறித்து எந்தவித தவறான கருத்தையும் கூறவில்லை
இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே கும்ப்ளே பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டபோது அவரை வரவேற்று போட்ட டுவீட் ஒன்றை தற்போது விராத்கோஹ்லி அழித்துள்ளார். இது கும்ப்ளே ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.
ஏற்கனவே கும்ப்ளே விஷயத்தில் விராத் கோஹ்லி நடந்து கொண்ட விதம் குறித்து கவாஸ்கர் உள்பட மூத்த கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு முன்பு போட்ட டுவீட்டை தேடிப்பிடித்து அழித்தது அவரது அர்ப்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com