'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆன விஜய்சேதுபதி படம்

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

தல அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான 'விஸ்வாசம்' படத்தில் அஜித் நயன்தாராவை அடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் அஜித் மகளான ஸ்வேதா என்ற கேரகரில் நடித்த அனிகா. இவருடைய நடிப்பை அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் 'மாமனிதன்' படத்தில் தற்போது அனிகா இணைந்துள்ளார். ஆனால் விஜய்சேதுபதியின் மகளாக அவர் நடிக்கவில்லை என்றும் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம், அனிகா உள்பட பலர் நடித்து வரும் 'மாமனிதன்' படத்திற்கு இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக்ராஜா ஆகியோர் இசையமைத்து வருகின்றனர். சீனுராமசாமி இயக்கி வரும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர் புரடொக்சன்ஸ் மற்றும் கே. புரடொக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றது.

More News

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம்: பானுப்ரியா மீது நடவடிக்கையா?

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், ஒரு வருடமாக சிறுமிக்கு சம்பளம் தராமல், குடும்பத்தினர்களையும்

'வஞ்சகர் உலகம்' பட நாயகியின் திருமண செய்தி

குருசோமசுந்தரம் நடிப்பில் 'வஞ்சகர் உலகம்' என்ற தமிழ்ப்படத்திலும் பல தெலுங்கு, கன்னட, மலையாள படங்களிலும் நடித்த நடிகை அனிஷா அம்ப்ரோஸ் அவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

'நீயா 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய இரண்டு படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் ஸ்மார்ட் ரன்னிங் டைம்!

சிம்பு நடிப்பில் சுந்தர் இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.