லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? அனிகா சுரேந்திரன் விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

அஜித்தின் ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் ’ஓ மை டார்லிங்’ . இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பது தெரிந்ததே.

மேலும் இந்த ட்ரெய்லரில் ஒரு லிப்லாக் காட்சியில் அனிகா சுரேந்திரன் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சர்ச்சைகள் இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

’ஓ மை டார்லிங்’ ஒரு முழு நீள காதல் திரைப்படம், அதில் முத்தக் காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர், இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே லிப்லாக் காட்சிக்கான முக்கியத்துவத்தையும் அவர் சொல்லியிருந்தார் என்றும் கூறினார்.

மேலும் கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்த காட்சியில் நடித்தேன், ஆனால் அதே நேரத்தில் அந்த காட்சியில் ஆபாசம் எதுவும் இருக்காது, இதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.