பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஜோடியாக அனிகா சுரேந்திரன்... இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் என்பதும், இவர் ஏற்கனவே ’வேலன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’வேலன்’ இயக்குனர் கவின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முகின் தான் ஹீரோ என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

சென்னை, நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார். இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் ஃபேமிலி சென்டிமென்ட் அம்சங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஷா சரத், ஆதித்யா கதிர் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

More News

சாயிஷாவின் குட்டிப்பாப்பா ஆடும் செம்ம டான்ஸ்.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை சாயிஷா தனது செல்ல மகள் குட்டி பாப்பா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோவுக்கு லைக் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியின் இந்த பிரபலமும் கார் வாங்கி விட்டார்.. செம்ம வீடியோ..

விஜய் டிவியில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்றும் சொந்த கார், சொந்த வீடு வாங்கி விடுவார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

'காவாலா' பாடலுக்கு சிம்ரனின் க்யூட் கமெண்ட்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிக்பாஸ் தனலட்சுமி.. நெட்டிசன்களின் வேற லெவல் கிண்டல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

புளூசட்டை மாறனின் அநாகரீகமான விமர்சனம்.. பதிலடி கொடுத்த ஜிபி முத்து..!

சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ஒரு திரைப்படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களை தனிப்பட்ட முறையில் அநாகரிமாக விமர்சனம் செய்வார்