இதனால் தான் நான் வெளியே செல்வதே இல்லை: 'விஸ்வாசம்' நடிகை வேதனை!

  • IndiaGlitz, [Wednesday,March 10 2021]

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் இதனால் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவருடைய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிகாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பதால் அவருடைய ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் என்னை பார்க்கும் பலரும் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.