ஆட்டுக் குட்டியுடன் செல்ஃபி… இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

செல்ஃபி எடுக்கும் பழக்கம் தேவையைத் தாண்டி தற்போது ஒரு போதையாகவே மாறிவிட்டது. இதனால் எதைப் பார்த்தாலும் செல்போனை நீட்டிக் கொண்டு பல இளசுகள் செல்ஃபி எடுக்க துவங்கி விடுகின்றனர். இப்படி செல்ஃபி எடுக்கும்போது சில நேரங்களில் விபரீதங்களும் ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் ஒரு இளம்பெண், நீண்ட கயிற்றால் கட்டப்பட்டு இருக்கும் ஆட்டுக் குட்டியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்து இருக்கிறார். அது கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது என்ற தைரியம் வேறு ஒருபக்கம். இதனால் கொஞ்சமும் யோசிக்காமல் அப்பெண் விதவிதமான முகபாவனைகளை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் இதை கொஞ்சமும் விரும்பாத ஆட்டுக் குட்டி திடீரென பின்னால் இருந்து பாய்ந்து செல்ஃபி எடுத்த பெண்ணின் தலையை பதம் பார்த்து விடுகிறது.

இந்த வீடியோ Thewild capture எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பல ஆயிரம் கமெண்டுகளை பெற்று இருக்கிறது. அதில் அடுத்த முறை செல்ஃபி எடுக்கும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்ஃபி எடுக்குமாறும் சிலர் அறிவுரை கூறி உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ பல ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் செல்ஃபி எடுத்த அந்தப் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.