சிறையில் இருக்கும் ஏஞ்சலினா ஜோலி ரசிகைக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சாஹர் தாபர் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஈரான் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்ற சாஹர் தாபர் என்ற பெண், நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகை ஆவார். இவர் ஏஞ்சலினா போலவே தனது முகத் தோற்றத்தையும் உடல் தோற்றத்தையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான வகையில் தனது சமூகக் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவுகள் போடும் வழக்கம் கொண்ட சாஹர் தாபர், கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வன்முறையை பரப்பும் விதமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்தான் ஈரான் நாட்டு நீதிமன்றத்தில் சாஹர் தாபர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சாஹர் தாபர் சிறையில் இருக்கும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

150 மில்லியன் டாலர்களை வழங்கி கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு அழைப்பு விடுக்கும் பில் கேட்ஸின் அறக்கட்டளை!!!

உலகின் பெரிய பணக்காரராக இருந்துவரும் பில் கேட்ஸின் பில் & மெலிண்&#

கொரோனாவால் குணமானவரை ஊருக்குள் அனுமதிக்காத பொதுமக்கள்: புதிய தீண்டாமையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தமிழகத்தில் இன்று மேலும் அதிகரித்த கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை தினமும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக 50க்கும் குறைவாகவே கொரோனாவால்

ஜஸ்டின் பீபர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத நடிகர் நடிகைகள் பலர் வித்தியாசமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை

5 மாநிலங்கள், 2700கிமீ: மகனை பார்ப்பதற்காக பயணம் செய்த தாய்!

சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்பதற்காக 1400 கிமீ தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அழைத்து வந்தார் என்பதை பார்த்தோம்