close
Choose your channels

தேனீக்களுடன் போட்டோ ஷுட் நடத்திய ஹாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!

Saturday, May 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு தேனீ கொட்டிவிட்டாலே அலறித் துடிக்கிறோம். இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையாகப் போற்றப்படும் ஏஞ்சலினா ஜோலி அவர்கள் உலகத் தேனீ தினத்தை முன்னிட்டு தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வண்ணம் அதுகூடவே போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்.

இந்த போட்டோ ஷுட்டுக்காக ஏஞ்சலினா கிட்டத்தட்ட 18 நிமிடங்கள் வரை தேனீக்களுடன் ஆடாமல் அசையாமல் இருந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தேனீ பாதுகாப்பு குறித்து Unesco வால் தொடங்கப்பட்டு உள்ள 5 ஆண்டு திட்டத்திற்கு ஏஞ்சலினா ஜோலி அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் God mother for women for beets என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஏஞ்சலினா ஜோலி தேனீக்களோடு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் National geographic magazine இல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த போட்டோ ஷுட்க்காக இத்தாலி வகை தேனீக்கள் பயன்படுத்தப் பட்டதாகவும் இந்த ஷுட்டை விண்ட்டர்ஸ் என்பவர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த 2025 ஆம் ஆண்டிற்குள் 125 மில்லியன் தேனீக்களை வளப்பது குறித்து Unesco தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஏஞ்சலினா தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தேனீக்களுடன் ஏஞ்சலினா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment