அமெரிக்க பிரஜை என்பதற்கே வெட்கப்படுகிறேன்… பிரபல ஹாலிவுட் நடிகை கடும் சாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் சூழல் குறித்து கடும் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க தவறு செய்துவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி கடும் விமர்சனம் வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து டைம் இதழில் வெளியான தலையங்கத்தில் நடிகை ஏஞ்சலினா ஜுலி அவர்கள், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதனால் தாலிபான்களின் கைகள் ஓங்கி வெறும் 10 தினங்களில் நாட்டையே பிடித்துவிட்டனர். இந்த நிலைக்கு ஆப்கானிஸ்தானை ஏன் தள்ள வேண்டும் என்று ஏஞ்சலினா ஜுலி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் நம்மை நம்பிய கூட்டாளிகளை(ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை) இப்படி பாதியில் கைவிட்டுள்ளது பலரது தியாகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் அவர் சாடியிருக்கிறார்.
இன்னும் கடுமையாக அமெரிக்க குடிமகளாக நான் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலைமை இனி என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் பல வருடங்களாகக் கொடிக்கட்டிப் பறந்துவரும் நடிகை ஏஞ்சலினா ஜுலி சினிமாவைத் தவிர சமூக பணிகளிலும் அக்கறை கொண்டவர். இவர் சுற்றுச்சூழல் தொடர்பான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க அரசு நடந்துகொண்டது குறித்து கடுமையாக விமர்சித்து டைம் இதழில் தலையங்கம் வெளியிட்டு உள்ளார். முன்னதாக இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா கடந்த 20 வருடங்களில் கிட்டத்தட்ட 3,000 ஆயிரம் ஆப்கன் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் தாலிபான்களிடம் இல்லாத அளவிற்கு விமானப் படையையும் அளித்திருக்கிறது.
இதைத்தவிர அதிநவீன ஆயுதங்கள் பலவற்றையும் பாதுகாப்பு அடிப்படையில் வழங்கி இருக்கிறது. இத்தனை இருந்தும் தாலிபான்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அரசு போராடாமல் பின்வாங்கி வருகிறது. இப்படியிருந்தால் ஆப்கானிஸ்தானை எந்தவொரு காலத்திலும் யாராலும் காப்பாற்ற முடியாது. சுதந்திரத்திற்காக சொந்த நாட்டு மக்கள் ஏக்கம் தெரிவிக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments