'அங்காடி தெரு' நடிகை காலமானார்.. மார்பக புற்றுநோய் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ’அங்காடி தெரு’ என்ற திரைப்படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்த நடிகை சிந்து காலமானார். அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக கூறப்படுகிறது.
‘அங்காடி தெரு’, ‘நாடோடிகள்’ உள்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாக அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி நேற்று இரவு 2.15 மணிக்கு அவர் தனது வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார். அவரது உடல் அவரது வளசரவாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பகுதி மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது இறுதிச் சடங்கு இன்று விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments