'குக் வித் கோமாளி'யில் இருந்து நான் வெளியேற ஒரே ஒருவர் தான் காரணம்.. ஆண்ட்ரியன் எமோஷனல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வார நிகழ்ச்சியில் எலிமினேஷன் போட்டியாளராக ஆண்ட்ரியன் இருந்தது அனைவரையும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பொருளின் பெயர் கூட என்ன என்று தெரியாதவரெல்லாம் டாப் 5ல் இருக்கும் நிலையில் ஆண்ட்ரியனை எப்படி எலிமினேட் செய்யலாம் என்று பலர் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்ட்ரியன் தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனலாக சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேற நான் ஒருவர் மட்டுமே காரணம். அன்றைய நாள் என்னுடையது அல்ல, நான் அன்றைய தினம் முழு ஈடுபாட்டுடன் சமைக்க வில்லை என்று தான் தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. அங்கிருந்த எல்லோரும் என் மீது மிகவும் அன்பு செலுத்தினர். இதுபோன்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு எனக்கு வேறு இருக்க முடியாது. மேலும் நான் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் முன்பைவிட வலிமையாக கண்டிப்பாக வருவேன். நாம சீக்கிரம் சந்திப்போம்’ என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் டாப் 5 போட்டியாளர்களாக ஷிவாங்கி, ஸ்ருஷ்டி, மைம் கோபி, விசித்ரா மற்றும் கிரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com