close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜோடியாக ஆசைப்படும் கமல் நாயகி

Friday, October 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமாகிய நடிகை ஆண்ட்ரியா அதன்பின்னர் விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய கமல் படங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி இவர் ஒரு நல்ல பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு நடித்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் குஷ்பு கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்ட்ரியா ஆச்சரியமூட்டும் ஒரு பதிலை அளித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த இசையமைப்பாளர் நடிகராக மாறினால் அவருக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறீர்கள்' என்ற கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, 'தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்' என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment