சமந்தாவை தொடர்ந்து ஆண்ட்ரியா செய்த மாஸான காரியம்… வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கொண்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தார். மேலும் இயற்கையான சூழலில் அங்கிருந்து எடுத்துக்கொண்ட வீடியோவைக்களையும் புகைப்படங்களையும் சமூகவலைத் தளங்களில் பதிவிட்டு இருந்தார். அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது காஷ்மீரின் குல்மார்க் பகுதிக்குச் சென்றிருக்கும் அவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றிருந்த நடிகை சமந்தா அங்குள்ள பள்ளத்தாக்கில் பனிச்சறுக்கு விளையாடியதோடு அடுத்தக் கட்டமாகப் பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். அந்த வகையில் தற்போது காஷ்மீர் சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் முதல் அனுபவம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
நடிகை, இசை ஆர்வலர், பின்னணி பாடகி எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அவ்வபோது தான் என்ன படிக்கிறேன் என்பதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிவருகிறார். இதைத்தவிர சமீபத்தில் இரத்ததானம் செய்திருந்த அவர் தன்னுடைய ரசிகர்களையும் ரத்ததானம் செய்யுமாறு ஊக்குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com