வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் ’ஆடுகளம்’. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’ஆடுகளம்’ படம் குறித்து பலரும் அறியாத ஒரு உண்மையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களான டாப்ஸி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகிய கேரக்டர்களுக்கு டப்பிங் கொடுத்த பிரபலங்கள் குறித்த தகவல் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது

நடிகை டாப்சிக்கு நடிகை ஆண்ட்ரியாவும், கிஷோருக்கு நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும், ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவியும் டப்பிங் கொடுத்துள்ளார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒருசிலருக்கு ஏற்கனவே தெரிந்தாலும் பலருக்கும் ஆச்சரியமான தகவலாக உள்ளது. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி ஆகிய மூன்று பிரபலங்களும் அப்போதே பணியாற்றியுள்ளது குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.