குட்டி விமானத்தில் மாலத்தீவை ரவுண்ட் அடிக்கும் ஆண்ட்ரியா: அட்டகாசமான வீடியோ!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

கடந்த சில வருடங்களாகவே தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களுக்கு இலவச விமான வசதி, தங்கும் வசதி, உணவு வசதி அனைத்தும் மாலத்தீவு சுற்றுலா துறை செய்து கொடுப்பதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து பல நடிகைகள் மாலத்தீவு சென்று வந்த நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே மாலத்தீவில் இருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் நீச்சல் குள புகைப்படங்கள் உட்பட பல புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாவில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் குட்டி விமானத்தில் மாலத்தீவை ரவுண்ட் அடிக்கும் காட்சிகள் உள்ளன. விமானத்திலிருந்து மாலத்தீவின் அழகை படம் பிடித்த காட்சிகள் மிகவும் ரம்மியமாக இருப்பதாகவும் இந்த காட்சிகளை பார்க்கும் போது உடனே மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் போல் இருப்பதாகவும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.