பந்தை வைத்து வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஆண்ட்ரியா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

நடிகை ஆண்ட்ரியா கையிலும் காலிலும் பந்தை மாற்றி மாற்றி வைத்து வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கௌதமேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதன் பிறகு அவர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ ’என்றென்றும் புன்னகை’ ’அரண்மனை’ ’உத்தமவில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் ’பிசாசு 2’ உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் ஒவ்வொன்றாக விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியா நடிகை மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார் என்பதும் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவரது ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் நிலையில் சற்றுமுன் அவர் ஜிம்மில் ஒரு பெரிய பந்தை கைகளிலும் கைகளிலும் மாறி மாறி வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.