பொம்மை குதிரையில் விளையாடும் இந்தக் குட்டி பாப்பா தமிழ் சினிமா நடிகை… யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா ஜெரெமையா இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தில் பாடிய பிறகு அவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்படி அறிமுகமான இவர் நடிகர் கார்த்தியுடன் “ஆயிரத்தில் ஒருவன்”, நடிகர் அஜித்துடன் “மங்காத்தா”, நடிகர் கமலுடன் “விஸ்வரூபம்” நடிகர் தனுஷ்ஷுடன் “வடசென்னை” சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் “தரமணி” படத்தின் நடிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.
பின்னணி குரல், பின்னணி பாடகி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா தற்போது ஒரு கவிஞராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். அந்த வகையில் “ப்ரோக்கன் விங்க் Broken wing” எனும் தனது முதல் கவிதைத் தொகுப்பையும் அவர் சமீபத்தில் வெளியிட்டு உள்ளார்.
மேலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா அவ்வபோது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது சிறுவயது புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை தற்போது பதிவிட்டு உள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சிவப்பு பொம்மை குதிரையில் அவர் விளையாடுகிறார். இதைக் குறிப்பிட்டு அந்தக் குழந்தை பருவத்திற்கு திரும்பிச் செல்ல ஆசைப்படுவதாகவும் கேப்ஷன் வெளியிட்டு உள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments