சித்தார்த்துக்கு ஜோடியாகும் கமல் நாயகி

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அவற்றில் ஒரு படம் குறித்த அறிவிப்பை சித்தார்த் தனது சமூகவலைத்தளத்தில் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு தற்போதைக்கு 'The House Next Door' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஆண்ட்ரியா ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Viacom18 மற்றும் Etaki Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.