ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்-அரசியல்வாதி யார்? அவரே அளித்த விளக்கம்
- IndiaGlitz, [Thursday,December 26 2019]
நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதி இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும், தன்னை காதலித்தவர் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் என்றும் அவர் கூறியதாக செய்திகள் பரவியது.
இந்த செய்தியை அடுத்து அந்த நடிகர்-அரசியல்வாதி யாராக இருக்குமென நெட்டிசன்கள் தங்களுடைய இஷ்டத்திற்கு ஒருசிலரின் பெயரை வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
நான் பேசிய அந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை என்பதால் நான் என்னையே மறந்து வெளிப்படையாக சில விஷயங்களை மனம் திறந்து கூறினேன். நான் என்னுடைய மோசமான காதல் குறித்து அந்த பேட்டியில் கூறியது உண்மைதான். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த காதல் குறித்து கூறியபோது நடிகர், அரசியல்வாதி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. கட்டுக்கதை போல் யாரோ இந்த விஷயத்தை கிளப்பிவிட்டார்கள். இதுமாதிரி வதந்திகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன். என்னை காதலித்தவர் நடிகர்-அரசியல்வாதி இல்லை’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ஆண்ட்ரியா காதல் குறித்து கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.