விஜய்யுடன் நடித்தால் தான் பெரிய நடிகையா? ஆதங்கத்தில் ஆண்ட்ரியா

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது திரையுலகம் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கே வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாகவும், நல்ல ரோல்களில் நடிக்கும் நடிகையை திரையுலகம் கண்டுகொள்வதில்லை என்றும் தனது ஆதங்கங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார். பெரிய நடிகருடன் நடித்தால் தான் நல்ல நடிகையா? சவால் நிறைந்த கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் நல்ல நடிகைகள் இல்லையா? என்று பேசினார்

மேலும் ஒரு படத்தின் கதைக்கு தேவை என்றால் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் ஒரு சில நடிகைகள் முத்தக்காட்சியில் கூட நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு பின்னர் அர்த்தமே இல்லாமல் திரையில் கவர்ச்சிக்காக சில விஷயங்களை செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நிர்வாணமாக நடிப்பதை விட அது மோசமாக உள்ளது என ஆண்ட்ரியா பேசியுள்ளார்.