தலைவன் இருக்கிறான் படத்தில் 'விஸ்வரூபம்' ஹீரோயின்கள்?  பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

கமல்ஹாசன் நடிக்க உள்ள ’தலைவன் இருக்கிறான்’ என்ற திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தில் நாசரின் மகன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ’விஸ்வரூபம்’ மற்றும் ’உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் முதல் பாகத்தில் நடித்த ரேவதியும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லாக்டவுன் இல்லைன்னு சொன்னா இப்படித்தான் ஆடுவேன்: ரஜினி, அஜித் நாயகி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கோடிக் கணக்கான பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தவித்து வருவதாக செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள்: WHO அதிர்ச்சி!!!

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரமாக பதிவாகி இருப்பதாக

24 மணி நேரத்தில் 5609 பேர் பாதிப்பு: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,06,750ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்

கிராமத்தில் விவசாயியாக மாறிய பிரபல ஹீரோ!

தமிழ் திரை உலகில் 'மதயானைகூட்டம்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் 'கிருமி' 'விக்ரம் வேதா' உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் கதிருக்கு கோலிவுட்