ஒரிஜினல் கேரக்டரில் நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா

  • IndiaGlitz, [Saturday,July 14 2018]

பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு திறமையான நடிகையாக மட்டுமின்றி ஒரு நல்ல பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பாடிய 'கண்ணும் கண்ணும் நோக்கியா', 'உன் மேல ஆசைதான்', 'கூகுள் கூகுள்' 'மாமா டவுசர்' போன்ற பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிஜத்தில் நல்ல பாடகியாக இருக்கும் நிலையில் ஒரு படத்தில் பாப் பாடகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ஆயுஷ்மான் பவா' என்ற தெலுங்கு படத்தில் தான் ஆண்ட்ரியா பாப் பாடகியாக நடிக்கவுள்ளார். சரண்தேஜ் இயக்கி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் ஆண்ட்ரியா இணையவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தெலுங்கு திரையுலகில் ஆண்ட்ரியா தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் தனுஷின் 'வடசென்னை' படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்று நடந்த நயன்தாராவின் அடுத்த படத்தின் பூஜை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையடுத்து

ஸ்ரீரெட்டியின் அடுத்த ஃபேஸ்புக் பதிவில் விஷால்

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் வீசிவந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புயல் தற்போது கோலிவுட்டை நோக்கி மையம் கொண்டுள்ளது.

நான் போலி பகுத்தறிவாளனா? தமிழிசைக்கு கமல் பதில்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்றும், அமாவாசை தினத்தில் கட்சி ஆரம்பித்து, அமாவாசை தினத்தில் கொடியேற்றுகிறார்

கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இடையே திரையிடப்படவுள்ளது

கீர்த்திசுரேஷூக்கு விஷால் தரும் பிறந்த நாள் பரிசு

விஷால் நடிப்பில் உருவான 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி