வில்லியாக களமிறங்கும் ஆண்ட்ரியா.. இளம் ஹீரோ தான் நாயகன்.. வொர்க் அவுட் ஆகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஆண்ட்ரியா தற்போது 38 வயதில் இருக்கும் நிலையில் 33 வயது இளம் ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் வொர்க் அவுட் ஆகுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக நடிகை ஆண்ட்ரியா தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்பில் உருவான ’பிசாசு 2’ மற்றும் ‘கா’ திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் லேடி டான் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை விக்ரமன் அசோக் இயக்க இருப்பதாகவும் இவர் ஒரு அறிமுகம் இயக்குனர் என்றும் தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கவின் நடித்து முடித்துள்ள ’ஸ்டார்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout