பாலியல் குற்றவாளிகளிக்கு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்க வருடக்கணக்கில் ஆவதால் தான் என்கவுண்டரில் முறைகளை மக்கள் ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது. உதாரணமாக நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இதனால் தான் மக்கள் என்கவுண்டருக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இதுபோன்ற ஒரு குற்றம் நம் மாநிலத்தில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த ஆலோசனையின் முடிவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை 21 நாட்களில் கொண்டு வரும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதாவது பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒரே வாரத்தில் முடிக்கப்பட்டு மூன்று வாரங்களில் தண்டனை வழங்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments